இலங்கையின் மத்திய பிரதேசம் ஒன்றில் நீருக்குள்ளிருந்து திடீரென தென்பட்ட ஆலயம்!

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 % வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் கடந்த மூன்று மாதகாலமாக காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை பயன்படுத்தி கெனியோன் , லக்‌ஷபான , புதிய லக்ஷபான , பொல்பிட்டி மற்றும் விமலசுரேந்திர போன்ற மின் ஆலைளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து நீர்த்தேக்கம் நிர்மாணத்தின் போது நீரில் மூழ்கிய ஆலயங்கள் உள்ளிட்ட சில இடிபாடுகளை தற்போது காணக்கூடியதாய் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் நீர் கொள்ளளவில் 25 சதவீதம் வரை மின்சாரம் உற்பத்திக்கு பெற்றுக்கொள்ள முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. மேலும் , காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக களனி கங்கைக்கு , நீரை விடுவிப்பதற்கு நீரின் கொள்ளளவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என மின்சார சபையின் உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.