வத்தளையில் கட்சி குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர் சொன்னார் மாகாண சபை தேர்தல் வர போகிறது.
தமிழ் மக்களுடைய வாக்குகள் ஒரு வாக்கு தமிழருக்கும் ஏனைய இரண்டு விருப்பு வாக்குகளும் சிங்கள உறுப்பினர்களுக்கு போடவேண்டும் என உரிமையோடு சத்தமாக சொன்னார் அவருடைய ஏனைய சகாக்கள் சந்தோஷமாக சிரித்தார்கள்.

அதற்கு இந்த தமிழர் சிங்கள மக்கள் ஒரு வாக்கை சிங்கள உறுப்பினர் ஒருவருக்கு போட்டுவிட்டு மற்ற விருப்பு வாக்கு இரண்டினை தமிழ் வேட்பாளர்களுக்கு போட சொல்லுங்கள் என்று சொன்னார்.
உடனேயே கோபம் அடைந்த அவர் சொன்னார் “தெமுளுன்ட ஏம கோமத சந்த தெக்காக் தென்னே” என்று அவரை ஏசினார்கள்பின் அவருடைய முழு கோபத்தையும் பார்த்துவிட்டு அவர்கள் இவரை சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.






