ஆஸ்திரேலியாவில் ஆசிய வம்சாவளி பெண் மாயம்

ஆஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளி பெண் காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி ரெட்டி, 33 , பல்மருத்துவரான இவர் கடந்த ஞாயிறன்று சிட்னியில் பல்மருத்துவ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அவர் மாயமனதாக நியூ சவுல்வேல்ஸ் போலீசில் புகார் கூறப்பட்டது.கடைசியாக செயின்ட் லியானோர்டு என்ற இடத்தில் இருந்த உணவகம் ஒன்றில் காலை உணவு வாங்குவது போன்ற காட்சிள் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.டி.டி.சி, கேமிராவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.