பனங்காட்டில் புத்தி கூர்மை எனுமர இராணுவத்தினரின் கண்காட்சி வீரசிங்க மண்டபத்தில் ஆரம்பம்…
பனங்காட்டில் புத்திகூர்மை எனும் இராணுவத்தின் கண்டுபிடிப்புகள் அடங்கிய கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேயர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராட்சி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சியில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இராணுவ படையணிகளைச் சேர்ந்த வீரர்களின் கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த கண்டுபிடிப்புக்களைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர், முப்படைத்தளபதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.










