சட்டவிரோதமாக இலங்கையை விட்டு செல்ல முயன்ற 30 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ட்ரோலர் படகொன்றில் பயணித்தபோது இன்று அதிகாலை தென் கடற்பிராந்தியத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள் என கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
குறித்த 30 பேரும் பிரான்ஸில் உள்ள ரீயூனியன் தீவிற்கு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.






