வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் மர்மமான விலங்கு ஒன்று தொடர்பில் பீதி ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குள்ள மனிதன் என பிரதேச மக்களினால் சந்தேகிக்கப்படுகின்ற இந்த மர்மமான விலங்கு நேற்று வலஸ்முல்ல, தெஹிகஹஹேன பிரதேசத்தில் 5 பேர் இதனை அவதானித்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் நேற்று இரவு இளம் பெண் ஒருவர் வீட்டு நீர் தொட்டிக்கு அருகில் இந்த மர்மமான விலங்கினை அவதானித்து கூச்சிட்டுள்ளார். அந்த இடத்திற்கு வந்த அவரது தாயாரும் அந்த மர்ம விலங்கினை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் அந்த விலங்கு அவ்விடத்தில் இருந்து ஓடி சென்று காட்டுக்குள் நுழைந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குள்ள மனிதன் என அடையாளப்படுத்தப்படும் இந்த மர்ம விலங்கு ஓடி சென்றதற்கான பாத அடிகளை அவதானித்துள்ளனர்.
இதேவேளை, அந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் உள்ள இளைஞர்கள் நேற்று இரவு முழுவதும் அந்த விலங்கை தேடிய நிலையில் அவர்களும் அதனை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் குள்ள மனிதன் தொடர்பில் இன்னமும் விஞ்ஞான ரீதியான சாட்சிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.






