இலங்கையில் காணப்படும் அதிசயம்…பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

கொத்மலை பிரதேசபைக்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்திற்குட்பட்ட சீன்தோட்டத்தில் அண்ணார்ந்து பார்க்குமளவில் பிரமாண்டமான கல் ஒன்று காணப்படுகின்றது.

இக்கல் இப்பிரதேசத்தின் மிக உயரமான கல்லாக காணப்படுவதோடு திருவிழா காலங்களில் உலாவரும் தேரைப்போல காணப்படுவதால் இக்கல் தேர் கல் என அழைக்கப்படுவதோடு பெயருக்கேற்றால் போல் தேர் போலவே தோற்றமளிக்கின்றது.இக்கல்லில் உயரத்துக்கமைய பல தட்டுக்களாகவும் காணப்படுகின்றது.

இக்கல் பூண்டுலோயா நகரின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் தென்படுவதோடு அக்கல்லின் அருகில் நிற்கும் போது பூண்டுலோயா வட்டாரத்தையே மிக தெளிவாக நோக்கலாம்.

இக்கல்லை பார்ப்பதற்கு உள்ளூர் மற்றும் சீன்தோட்டத்தை அண்டிய பிரதேசத்தினர் வருகைத்தரும் இடமாக மாறிவருகின்றது.

இக்கல்லின் அருகில் ஓர் நீர்வீழ்ச்சி காணப்படுகின்றது. மிக ஆச்சரியமான நீர்வீழ்ச்சி. அந்நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் மாயமாக மறைகின்றது.அவ்வாறு மறையும் நீர் எங்கே தென்படுகின்றது