சிலாபம் குருநாகல் வீதியில் முன்னேஸ்வரம் குளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான பஸ் ஒன்றில் பயணித்த பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ் சிலாபத்திலிருந்தது குருநாகல் நோக்கி பயணித்துள்ளது.
பயணித்துக்கொண்டிருந்த பஸ் பாதையை விட்டு விலகி முன்னேஸ்வரம் குளத்திற்குள் விழும் நிலை ஏற்பட்ட போது குளத்தின் விளிம்பில் நின்ற மரமொன்றினால் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ் குளத்தினுள் விழுந்திருப்பின் அதில் பயணித்த பயணிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸை மீட்டெப்பதற்காக மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சிலாபம் குருநாகல் வீதியின் போக்குவரத்து 30 நிமிடங்களுக்கு தடை ஏற்பட்டது.
குறித்த பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்






