வவுனியா திரையரங்கில் கல்லூரி மாணவிகள்!!

வவுனியா திரையரங்கில் கல்லூரி மாணவிகள்!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து திரையரங்கில் பாகுபலி- 2 படம் பார்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலை 2.30 மணிக்கு பாடசாலை சீருடையுடன் மாணவிகளை அதிபர், ஆசிரியர் அழைத்துச் சென்று வவுனியா நகரில் அமைந்துள்ள திரையரங்கில் பாகுபலி – 2 திரைப்படம் பார்த்தனர்.
பாடசாலை பெற்றோர்களின் அனுமதியுடனே மாணவிகளை திரையரங்கு அழைத்துச் சென்றதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
திரைப்படம் பார்ப்பதற்காக மாணவிகள் இடம் இருந்து 250 ரூபாய் வீதம் பணமும் அறவீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாணவிகள் திரையரங்கில் இருந்து வெளியேறிய போது அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து பொலிசார் அதனை சீர்செய்தனர்.
இது குறித்து வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வி.இராதாகிருஸ்ணன் அவர்களிடம் கேட்ட போது,
நான் இரண்டு தினங்கள் விடுமுறையில் இருந்தமையால் அனுமதி எடுத்தமை தொடர்பில் எனக்கு தற்போது கூறமுடியாது.
ஆனால் பாடசாலை மாணவர்களை கல்வி நேரத்திற்கு புறம்பாக பாடசாலை விட்ட பின் பெற்றோரின் அனுமதியுடன் படம் பார்க்க அழைத்துச் செல்ல முடியும். அதற்கான அனுமதிகள் முறையாக பெற்று செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஒழுக்கத்திற்கும், கல்விக்கும் சிறப்பு பெற்று வவுனியா நகரில் சிறந்த நிலையில் உள்ள பாடசாலை ஒன்று பாடசாலை சீருடையுடன் மாணவிகளை திரையரங்குக்கு அழைத்து சென்று சினிமா படம் பார்த்தமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
அத்துடன் இத்திரைப்படம் ஓர் வரலாற்று திரைப்படமோ அல்லது அறிவியல் சார் திரைப்படமோ இல்லை வெறும் கவர்ச்சியையும் வர்த்தகத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிரமாண்ட வர்த்தக திரைப்படம் இதில் மாணவர்கள் எதை பயில்வதற்காக பாடசாலை சமூகம் மாணவர்களை அழைத்து சென்றது வரும் காலங்களில் பிரபல நடிகர்களின் பிரமாண்ட திரைப்படங்கள் வெளியானால் அதற்கும் அழைத்து செல்வார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்