இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்! அமெரிக்கா செல்ல வாய்ப்பு

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.

கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் 25 பேர் அமெரிக்காவில் தாதியாக பயணியாற்றுவதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இலங்கை இளைஞர் யுவதிகள், அமெரிக்காவில் தாதி சேவை பணி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அந்நாட்டு நிறுவனத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பெண் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 3000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவில் தாதியாக பணியாற்றுவதற்கு, இலங்கையில் தாதியாக 4 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்று தற்போதும் பணியில் உள்ளவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தாதி சேவை தொடர்பில் பட்டம் அல்லது 4 வருட டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். IELTS பரீட்சை அமெரிக்க தரத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும். 45 வயதிற்கு குறைந்தவர்களுக்கு இந்த தொழிலுக்காக விண்ணப்பிக்க முடியும்.

அமெரிக்காவில் தாதி பணியில் இணையும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மாதம் 5000 அமெரிக்க டொலர் அடிப்படை சம்பளம் கிடைப்பதோடு, குடும்ப உறுப்பினர்களையும் அந்த நாட்டிற்கு அழைக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like