பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார்- 200 பெண்களை மிரட்டிப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்துப் பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20 இற்கும் மேற்பட்ட அயோக்கியன்கள்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்புக்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சபரிராஜன்,சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் 15 நாட்கள் காவல் முடிந்தது.

இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் நேற்று மீண்டும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் 3 பேருக்கும் மேலும் 15 நாட்களுக்கு காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்து உத்தரவு பிறப்பித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.