குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சு பதவியை துறப்பேன்!

தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதிவியை துறப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச பாடப்புத்தங்களில் கல்வி அமைச்சரின் புகைப்படத்தை அச்சிட 29 மில்லியன் ரூபாய் மேலதிகமாக செலவானதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இன்று நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

இந்த ஆண்டுக்காக அச்சிடப்பட்ட அரச பாடப்புத்தங்களில் கல்வி அமைச்சரின் புகைப்படம் பதிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. இதற்காக மேலதிகமாக 29 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசமான கல்வி நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது” என சபையில் அவர் குற்றம் சுமத்தினார்.

இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அரச பாடப்புத்தங்களில் தனது புகைப்படத்தை அச்சிட 29 மில்லியன் ரூபாய் மேலதிகமாக செலவானதாக மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது.

அவ்வாறு தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனது அமைச்சு பதவியை துறப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.