உடைக்கிறதா ரெலோ? வேறு கட்சியுடன் இணைகின்றாரா கோடீஸ்வரன் ??

நடைபெற்று முடிந்த இலங்கை அரசின் 2019 ற்கான வரவு செலவு திட்டத்தின், பாராளுமன்ற முதலாவது வாசிப்பின் வாக்கெடுப்பில், குறித்த திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் தன்னிலை முடிவை ரெலோ எடுத்திருந்தது.

டெலோ சார்பில் வடக்கில் அதன் அதன் தலைவர் செல்வம் அடைக்கல நாதனும் , கிழக்கில் அம்பாறையில் கோடீஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்ற கிழமை இடம்பெற்ற முதலாவது வாசிப்பின் வாக்கெடுப்பில் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் செல்வம் அடைக்கல நாதன் எதிர்த்து வாக்களித்த போதும் , மற்றைய உறுப்பினரான கோடீஸ்வரன் ஆதரித்து வாக்களித்திருந்தார்.

இது கட்சியின் ஒருமைப்பாட்டுக்கு விரோதம் என அதன் உறுப்பினர்கள் பலர் விசனம் தெரிவித்ததோடு, கோடீஸ்வரன் தான் சார்ந்த கட்சியின் கொள்கையில் சீற்றம் அடைந்து இந்த முடிவை எடுத்தாத்தாவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தேவேளை ரெலோ வின் செயலாளர் நாயகம் என் ஸ்ரீகாந்தா அன்று மாலையே கோடீஸ்வரனுக்கு எதிராக கட்சியால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனை இன்றும் ஐ.பி.சி தமிழுக்கு உறுதிப்படுத்தி இருந்தார்.

எனினும் ரெலோ வின் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ரெலோவை விட்டு வேறு கட்சியுடன் இணையவுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இன்று வெளியாகி இருந்தன, இதனை உறுதிப்படுத்த கோடீஸ்வரன் எம்.பி யுடன் தொலைபேசியில் ஐ.பி.சி தமிழ், இன்று தொடர்பினை ஏற்படுத்த பலமுறை முயன்ற போதும் அது அணைக்கப்பட்டு இருந்தது.