157 உயிர்களைப் பலியெடுத்த எதியோப்பிய விமானத்தின் கறுப்புப்பெட்டி!

எதியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வீழ்ந்து நொருங்கிய போயிங் 737மக்ஸ் (Boeing 737 Max) விமானத்தின் கறுப்பு பெட்டி மற்றும் குரல் பதிவு கருவி என்பன நேற்று வியாழக்கிழமை பிரான்ஸ் விமான பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு அதுகுறித்த பரிசோதனை இடம்பெறும் என்பதுடன் இந்தச் சோதனை மூலம் எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் பதிவின் (Data recorder) தற்போதைய நிலையில், இதிலிருந்து உடனடியான குரல் பதிவு இல்லை எனவும். முன்னைய தற்காலிக குரல் பதிவுகளை எடுக்க சில நாட்கள் தேவை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், 737 மக்ஸ் ரக விமானங்கள் 50 நாடுகளில் 371 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குளானதில் இருந்தே போயிங் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டதட்ட 26 பில்லியன் டொலருக்கு குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.