இலங்கையின் 67 இராணுவ உயரதிகாரிகளை உடன் கைதுசெய்யுமாறு சர்வதேசத்திலிருந்து பறந்த அவசர செய்தி

யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சாகி கால்லகே, கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளடங்களாக, 67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் அறிவுறுத்தியுள்ளார்.

17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இவர்கள் அனைவரும் குறித்த நாடுகளுக்கு வந்தால் கைதுசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ஐ.நா. ஆணையாளரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன்படவில்லையென கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.

யுத்தக்குற்றத்திற்குள்ளான இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை சர்வதேச நீதமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அறிவுத்தலை இதற்கு முன்னர் பதவியில் இருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எவரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like