ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ள புதிய பிரேரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை எதிர்வரும் 21ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படவுள்ளது.

குறித்த புதிய பிரேரணையை பிரிட்டன், ஜேர்மன், கனடா உள்ளிட்ட ஐந்து நாடுகளால் கடந்த 11ஆம் திகதி முன்வைக்கப்பட்டன.

மேலும் இப்பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.

மேலும் அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, இலங்கை, சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.