யாழிலிருந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் பலியான சோகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அதிகாலை விபத்துக்குள்ளனாதில் விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் சாரதியும் உரிழந்துள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நாகவில்லு பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்திருந்து.

யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற வேன் ஒன்றுடன், எதிர்த் திசையில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த குறித்த வேன் நாகவில்லு பகுதியில் உள்ள இரவு ஹோட்டலில் நிறுத்தியுள்ளது.

பின்னர், மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் குறித்த வேனில் பயணித்த சாரதி உட்பட பத்து பேருடன், வீதியோரத்தில் நின்ற மற்றுமொரு லொறியின் சாரதியொருவரும் பாடுகாயமடைந்தார்.

இந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் வேனில் பயணித்த கர்ப்பிணத் தாய் உட்பட மூன்று பெண்களும், வீதியோரத்தில் நின்ற லொறியின் சாரதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எழுவரில் ஆண்கள் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்களும், சிறுமி ஒருவரும் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.