யாழில் நெகிழ வைத்த நீதிபதி

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு நீதிவான் கடமைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதியே இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் விபத்துக்கு உள்ளான போது மோட்டார் சைக்கிள் ஓட்டியான கோப்பாய் வடக்கை சேர்ந்த 34 வயதான சின்னத்தம்பி வசந்தன் என்பவர் காயமடைந்தார்.

அவ்வேளை இவ்வீதியூடாக சாவகச்சேரி நீதிமன்றுக்கு கடமைக்கு சென்ற நீதிவான் விபத்தில் காயமடைந்த இளைஞனை மீட்டு தனது காரில் ஏற்றி சென்று சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு கடமைக்கு சென்றார் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like