சீமானுக்கு புதுக்குழப்பம்! கட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா!

பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள நிலையில் புதுக்குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

என்னவெனில் மதுரையில் அமமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரை முன்னால் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அதாவது சீமானின் மைத்துனர் ஆவார்.

இதனால், அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் சீமான், மதுரையில் வேட்பாளரை அறிவிப்பாரா? அப்படி அறிவித்தாலும் அவரின் பிரச்சாரம் எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ஏனெனில், டேவிட் அண்ணாதுரையின் சகோதரி கயல்விழி தான் சீமான் திருமணம் செய்திருக்கிறார்.

எனவே குடும்பத்தில் ஒற்றுமையாகவும், அரசியலில் எதிரியாகவும் மைத்துனருக்கு எதிராகச் சீமான் திகழ்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கட்சியாக , குடும்பமா முக்கியம் என்ற நிலையில் சீமானின் நகர்வு எப்படி இருக்கப்போகிறது என ஆவலுடன் கடசியினரும், அரசியல் நோக்கங்களும் அவதானித்தவண்ணம் உள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like