வீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

பெண்ணொருவருக்கு கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் கைகள் மூலம் பாலியல் சேஷ்டைகளை செய்து காண்பித்துள்ளார்.

அது மாத்திரமின்றி கைகளால் சைகை செய்த அந்த இளைஞன் ஒரு கட்டத்தில் தனது காற்சட்டையை கழற்றுவது போலவும் பாசாங்கு செய்து அருவெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டு பெண்ணின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பெண் இவற்றையெல்லாம் தனது தொலைபேசியின் மூலம் குறித்த நபருக்கு தெரியாது காணொளி மூலம் பதிவு மேற்கொண்டதுடன், அந்த காணொளியை சமூக ஊடகங்களில் தரவேற்றிய நிலையில் அது வைரலாக பரவியது.

இதையடுத்து குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார், மேற்படி இளைஞனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் தெல்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like