மனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்

போலி கடவுசீட்டை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான ஈராக் நாட்டவர் ஒருவரே இவ்வாறு இன்று காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஈராக்கில் இருந்து டுபாய் நோக்கி செல்லவிருந்தார். அவர் அங்கிருந்து ப்லை டுபாய் விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அங்கு அவர் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய அவரிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் பிரித்தானியர் போன்று மிகவும் சரலமாக ஆங்கிலம் பேசியுள்ளார். தான் பிரித்தானியர் எனவும் தனது மனைவியை பார்க்க செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அதிகாரிகள் இந்த நபரின் கடவுசீட்டை விசேட தொழில்நுட்பம் பயன்படுத்தி சோதனையிட்ட போது பிரித்தானியா கடவுசீட்டிற்கு பயன்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு பொருள் ஒன்று அதனுள் இல்லமையினால் அது போலி கடவுசீட்டு என தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அவரது பயண பையை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட அவரது ஈராக் கடவுசீட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.