விடுதலைப்புலிகள் புதைத்த ஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்து வைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்த நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த ஆயுதங்களை கொண்டு இலங்கையின் அரச தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறி சிலரை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணகளில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த கொலை சதி குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடி கண்டுப்பிடித்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் தடுப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like