சென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..!

இன்றைய காலகட்டத்தில் பல கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றால் அது மிகையாகாது.

சில பொருட்களை நாம் வாடகைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுமட்டும் இல்லாமல்., வாடகைக்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்கின்ற சூழல் தற்போது நிலவுகிறது.

அந்த வகையில்., மனைவிகள் கூட இப்போது வாடகைக்கு கிடைக்கிறார்களாம். அதிர்ச்சியாக உள்ளதா..?

மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு தொழில் ரீதியாக செல்லும் பிசினஸ் மேன்கள் சில காலம் அங்கு தங்கியிருந்து தங்களது வேலைகளை பார்ப்பதுண்டு.

அந்த நேரத்தில்., அவர்கள் தற்காலிகமாக ஒரு துணையை தங்களுக்கு அமர்த்தி கொள்கின்றனர்.

அவர்கள் வாடகை மனைவி என்று அழைக்கப்படுகின்றனர். அந்த பெண்களுக்கு மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுடன் தற்காலிகமாக வாழ்கின்றனர்.

அவர்களோடு ஷாப்பிங்., சினிமா என்று சொந்த மனைவியுடன் இருப்பதை போன்று வாழ்கிறார்கள்.

இந்த கலாச்சாரம் தற்போது சென்னையிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சென்னையில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலதிபர்கள் பலர் இதுமாதிரியான வாடகை மனைவிகளை அமர்த்திக்கொள்கின்றனர்.

அவர்களுக்கு வாடகை மனைவிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும்., ஆந்திரா, மும்பை, வங்காளத்தை சேர்ந்த பெண்களாக இருக்கிறார்கள். இதெற்கென்று பெரிய நெட் ஒர்க் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

தனி மனித ஒழுக்கம்., மன கட்டுப்பாடு இல்லை என்றால் இது போன்ற கலாச்சார சீர்கேட்டை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like