உயர்தரத்தில் இந்த பெறுபேறு இருந்தாலே வைத்தியராகலாமா?

உயர்தரத்தில் இந்த பெறுபேறு இருந்தாலே வைத்தியராகலாமா?

உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் 2 சீ மற்றும் ஒரு எஸ் என்ற குறைந்தப்பட்ச பெறுபேறுகள் இருந்தால் இலங்கையில் வைத்தியர் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபையில் வைத்தியராக வேண்டும் என பதிவு செய்யும் மாணவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் இருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை மருத்துவ கவுன்சிலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இலங்கை மருத்துவ சபையின் துணைத் தலைவர் நிலாந்தி டி சில்வா,மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தமைக்கு காரணம், மருத்துவப் பிழைகளே என இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சபை தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

1875 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் எந்த பகுதியிலும் பயிற்சிப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றும் கார்லோ பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

1924 ஆம் ஆண்டு மருத்துவ சபை கட்டளை எண் 24 இற்கு இணங்க இலங்கை மருத்துவ சபை (இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம்) ஸ்தாபிக்கப்பட்டது.

நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல், அவர்களின் வாழ்க்கை உரிமை என்பதே இலங்கை மருத்துவ சபையின் பிரதான பணியாக இருந்து வருகின்றது என்றும் இதன் போது குறிப்பிடப்பட்டுள்ளது.