யாழ் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடி தண்ணீர் போத்தல்கள் , மென்பானங்கள் , இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அவற்றை திறந்த வாகனங்களில் ஏற்றி வெயிலில் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்வதனையும் நிறுத்துமாறும், தவறும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வியாபரிகளை சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார பிரிவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,

மென்பானம் மற்றும் குடிநீர் போத்தல்கள் வெயில் வைக்கப்பட்டு , அதிக வெப்பம் அவற்றின் மீது பட்டால் அவற்றில் உள்ள இராசாயன பதார்த்தங்கள் பழுதடையும் அபாயம் உள்ளது. அதனை பொதுமக்கள் வாங்கி பருகும் போது நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. எனவே அது தொடர்பில் பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

எமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல கடைகளில் இவற்றை கடைகளுக்கு வெளியே அடுக்கி வைத்து காட்சி படுத்தியுள்ளதாகவும் , வீதியோரங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கடைகளிலும் அவை வெய்யிலில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன.

அவை தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திஉள்ளோம். இனிவரும் காலங்களில் அவற்றை பாதுகாப்பாக வைத்து வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like