நீதிபதி மா.இளஞ்செழியன் கொடுத்த உத்தரவு : ஹிஸ்புல்லாவுக்கு அடிமேல் அடி!

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனத்தை போட்டிப் பரீட்சையின் திறமை அடிப்படையில் வழங்குவதற்குவதற்காக உடனடியாக நேர்முகப் பரீட்சையை நடாத்தி அடுத்த தவணை 29.04.2019 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடம் நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திறமை அடிப்படையில் தேர்வு இடம்பெறாது இன விகிதாசார அடிப்படையில் தேர்வு இடம்பெறுவதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இதேவேளை, திறமை அடிப்படையில் தான் புள்ளி பெற்றுள்ளதாக பரீட்சை எழுதிய விண்ணப்பதாரிகளினால் தன்னை நேர்முக தேர்விற்கு அழைக்கவில்லை என்று ஆளுநர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண கல்வி செயலாளர், கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக ஆணைக்குழுவினால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மா.இளஞ்செழியன் கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனத்தை போட்டிப் பரீட்சையின் திறமை அடிப்படையில் வழங்குவதற்குவதற்காக உடனடியாக நேர்முகப் பரீட்சையை நடாத்தி அடுத்த தவணை 29.04.2019 அன்று மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like