வடக்கு மாகா­ணத்­தில் – 491 பேருக்கு ஆசி­ரி­யர்­கள் நிய­ம­னம்!!

வடக்கு மாகா­ணத்­தில் 491தொண்­டர் ஆசி­ரி­யர்­களை அரச நிய­ம­னத்­துக் குள் உள்­வாங்க அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.தேசிய கொள்­கை­கள் பொரு­ளா­தார விவ­கா­ரம், மீள்­கு­டி­ய­மர்வு மற்­றும் மறு­வாழ்­வ­ளிப்பு, வடக்கு மாகாண அபி­வி­ருத்தி, தொழிற்­ப­யிற்சி, திறன்­கள்அபி­வி­ருத்தி மற்­றும் இளை­ஞர் விவ­கா­ரங்­கள் அமைச்­சின் செய­லர் வே.சிவ­ஞா­ன­சோதி இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அவர் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பி­லேயே இந்த விட­யம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.அதில் உள்­ள­தா­வது-

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தேசிய கொள்­கை­கள் பொரு­ளா­தார விவ­கா­ரம், மீள்­கு­டி­ய­மர்வு; மற்­றும் மறு­வாழ்­வ­ளிப்பு, வடக்கு மாகாண அபி­வி­ருத்தி, தொழிற்­ப­யிற்சி, திறன்­கள் அபி­வி­ருத்தி மற்­றும் இளை­யோர் விவ­கா­ரங்­கள் அமைச்­சர் என்ற முறை­யில் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை முன்­வைத்­தி­ருந்­தார். அதில் 491 பேரை தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளாக இலங்கை ஆசி­ரி­யர் சேவை வகுப்பு 3 தரம் 11க்கு உள்­வாங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவை அனு­ம­தி­யைக் கோரி­யி­ருந்­தார்.

இதன் கீழ் கா.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்­தும் கா.பொ.த உயர்­த­ரத்­தைப் பூர்த்தி செய்­தும், 3 வரு­டங்­கள் தொடர்ச்­சி­யா­கச் சேவை­யாற்றி இருப்­பின் ஆசி­ரி­யர்­சேவை வகுப்பு 3 தரம் 11க்கு நிய­மிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டது.

30 வரு­டங்­கள் போர் கார­ண­மாக இவர்­களை உள்­வாங்­கும்­போது வயது எல்லை 50 க்கு மேற்­ப­டா­ம­லும், 3 வரு­டங்­கள் தொடர்ச்­சி­யாக சேவை­யாற்­றும் பொழுது அதில் நலன்­புரி நிலை­யங்­க­ளி­லும் இருந்த காலப்­ப­கு­தி­கள் கருத்­தில் எடுக்­கப்­பட வேண்­டும் என­வும் 55வீத­மான வர­வைப் பூர்த்தி செய்­தி­ருக்க வேண்­டு­மென்­றும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­குக் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிபந்­த­னை­கள் பொருந்­தும் பட்­சத்­தில் உள்­வாங்­கப்­பட வேண்­டும் என­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதற்­கு­முன் 2017 ஆம் ஆண்­டில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தில் 639 தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இந்த நிலை­யில், மேலும் 491 பேரை உள்­வாங்க அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டி­ருப்­பது வடக்கு மாகாண அபி­வி­ருத்­தி­யில் இளை­யோ­ருக்கு அர­ச­துறை வேலை­வாய்ப்பை வழங்­கு­வ­தற்­கான வாய்ப்­பாக அமை­கி­றது. இவர்­க­ளுக்கு உரிய பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு தர­மான ஆசி­ரி­யர்­க­ளாக மாற்­றப்­ப­டு­வர்.- என்­றுள்­ளது.

வடக்­கில் நிய­ம­னம் வழங்­கப்­ப­டாத மேற்­கு­றித்த தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் விரை­வில் நிய­ம­னம் வழங்­கு­மாறு பல தட­வை­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­தி­ருந்­தமை தெரிந்­ததே.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like