குள்ள மனிதனால் தேன்நிலவில் புதுமணத் தம்பதியினருக்கு நடந்த விபரீதம்! இறுதியில் நடந்தது என்ன?

திருமணமாகிய புது மணத் தம்பதி ஒன்றிக்கு, குள்ள மனிதன் கனவினால் விபரீத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த வாரம் இறுதியில் திருமணம் புரிந்த தம்பதியினர் தமது தேன்நிலவிற்காக கண்டிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் நடு இரவில் மணமகன் முகத்தில் இரத்ததுடன் பலமாக சத்தமிட்டு கொண்டு விடுதி வரவேற்பறைக்கு ஓடி வந்துள்ளார்.

இந்த எதிர்பாராத விதமான சம்பவம் குறித்து விடுதி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மணமகன் மற்றும் மணமகளிடம் விசாரித்துள்ளனர்.

மணமகள் நித்திரையில் இருக்கும் போது குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போல் கனவு கண்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த குள்ள மனிதனிடம் இருந்து தப்பிக்க கனவில் தாக்குதல் நடத்தியது, அருகில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது பட்டுள்ளது.

அண்மைய காலமாக இலங்கையில் பல இடங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக வதந்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குள்ள மனிதர்கள் தொடர்பான தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இவ்வாறான குள்ள மனிதர்கள் இல்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்தில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like