கிளிநொச்சியில் வடக்கு ஆளுநரிற்கு கொடுத்த உணவு பொட்டலத்தில் சிக்கிய மர்மம்! உண்மையில் நடந்தது என்ன?

கடந்த 27-03-2019 அன்றய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்கு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் ஹோட்டலில் மதிய உணவு வாங்க வந்தனர்.

அதில் அசைவ உணவு 17 பார்சல் வைச உணவு 7 பார்சல் மற்றும் ஃபிரைட் றைஸ் 30 பார்சல் வேண்டும் எனக் கோரப்பட்டது.

எனினும் ஹோட்டல் உரிமையாளர் அங்கு இல்லாத போதும் கடமையில் நின்ற ஊழியர் சாப்பாடு ஓடரை ஏற்று சில கறி இல்லாத காரணத்தால் அவர்கள் வேண்டும் என கேட்டதால் உடனடியாக தயார்ப்படுத்திக் கொடுத்தனர்.

அதில் உடனடியாக அவசரத்தில் தயார்படுத்தி கொடுக்கப்பட்ட கறியில் ஒன்று கத்தரிக்காய் கறியும் ஆகும்.

மாவட்ட செயலகத்தில் உணவு பார்சல் பரிமாறப்பட்ட நேரம் ஆளுநரின் சாரதிக்கு சென்ற உணவுப் பார்சலில் தான் புழு இருந்தாகவும் அதிலும் கத்தரிக்காய் கறியில் கத்தரிப் புழு இருந்தாக குற்றச்சாட்டை ஆளுநர் தரப்பை சேர்ந்தவர்கள் முன் வைத்தனர்.

உடனடியாக ஹோட்டல் உரிமையாளரை வர சொல்லி தொலைபேசி மூலம் அழைதார் எனினும் அவர் வேலைப்பழு காரணமாக ஊழியரை அனுப்பிய போது அவருக்கு பேசிய போதும் ஹோட்டல் உரிமையாளருக்கும் தொலைபேசி மூலம் “என்ன புழுப் போட்டா சாப்பாடு சமைக்கிறாய்” என தாறுமாறக பேசினார்.

அத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்ற கட்டளையும் பெறப்பட்டது. இதுவே நடைபெற்ற ஆரம்ப கட்ட சம்பவம்.

பின்னர் நீதிமன்ற கட்டளையினை ஏற்று ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட இருந்த நிலையில் பிரச்சினையில் தலையிட்டு ஆளுநர் ஐ.நா சபை விவகாரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தனது அரசியல் பின்னடைவை நிவர்த்தி செய்யும் முகமாக முந்திரி கொட்டை முந்திய கதையாக முற்பட்டு இறுதியில் ஆளுநர் மூக்கு உடைப்பட்டார்.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கில் 100% தூய்மையான சுகாதார முறையில் எந்த ஹோட்டல் தரப்பும் நடைமுறையில் இல்லை.

எல்லா இடமும் குறைபாடுகள் உண்டு. இதற்கு வட மாகாண சபை நிர்வாக அம்மாச்சி ஹோட்டல் கூட விதி விலக்கு இல்லை.

ஆனால் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதற்காக இங்கு நடந்தது ஆளுநர் அரசியல் விவகாரம் மட்டுமே ஆகும். அதிலும் சட்டப்படி எடுத்துச் சென்ற பார்சலில் உறுதியான குற்றச்சாட்டை முன் வைக்க முடியாது என்பதே சட்ட ரீதியான நிலைப்பாடு.

அத்துடன் பாரதி ஹோட்டல் உரிமையாளர் சிறுக சிறுக உழைத்து வளர்ந்த சதனையாளன். அது உரிமையாளரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

சில தருணம் தவறு இருப்பின் அதை ஏற்று திருத்துவதாக ஹோட்டல் உரிமையாளர் உடன்படுகின்றார். அதற்காக ஆளுநர் தனது சுய நல அரசியல் தேவைக்காக எமது தமிழ் வர்தகர் மீது சட்டதிற்கு முரணாக அடாவடி பண்ண இடம் கொடுக்க முடியாது.

உரிமையாளர் தற்போது கூறினார் தான் அதிகமாக முரண்பட விருப்பம் இல்லை எனவும் தன்னால் முடிந்தவரை தனது நிலமையினை சீர் செய்து மீள ஹோட்டல் உரிய தரத்துடன் புதுப்பொலிவுடன் நடாத்தி செல்வதே தனது நோக்கம் என்பதை கூறினார். சில அழுத்தங்களை விலக்கும் நோக்கில் உரிமையாளர் கருத்து video பதிவினை அவர் விரும்பவில்லை.

தற்போது வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வழங்கு 05-04-2019 அன்றைய தினம் நடைபெற உள்ளது. எனினும் 01-04-2019 மீள ஹோட்டல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாரதி ஹோட்டல் கிளிநொச்சியின் அடையாளம். உரிமையாளர் ரவி முயற்சியின் இன்னொரு வடிவம். உலகில் உள்ள முன்னணி தொழில் நுட்பங்களை உள்வாங்கிக்கொள்வதில் வல்லவர். இங்கு முன்னேறத்துடிப்பவர்களுக்கோர் முன்னுதாரணம்!

15-20 வருடத்துக்கு முன்னர் வீதி வீதியாக இளநீர் விற்ற ஒருவர், மக்கள் கூடும் இடங்களில் றோல் விற்ற ஒருவர் இவ்வளவு வளரமுடிந்ததென்றால் அதற்கு அவரது திறமை, சாதுரியம், தொழில் நேர்மை, கண்ணியம் என்பன காரணங்கள்.

இவ்வளவு சாதனைகளும் ஒரு சாதாரண அரசியல் சதியில் அடிபட்டுவிடலாகாது.இது தான் ஆளுனர் பிரச்சினை பண்ணுவதற்கு காரணம்:

ஜெனீவாவால் இழந்த பெயரை பாரதியை வைத்து மீட்கலாம் என்று திட்டம் போட்டிருப்பார்கள்! அடுத்தவர் அரசியல் சதிகளுக்கு இங்கு இடமில்லை என்று காட்டுவோம்!பெரிய கோடு போட்டால் ஏற்கனவே இருந்த கோடு சின்ன கோடாகும் என்ற அரசியல் நமக்கும் தெரியும் என்று காட்டி விடுங்கள்.