இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

லிந்துலை கொத்மலை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களுள் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளர்.

இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக லிந்துலை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

4 இளைஞர்கள் கொத்மலை ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் சடலம் லிந்துலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அப்புத்தளையிலிருந்து லிந்துலைக்கு விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்ற 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார் என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.