யாழ் பொலிஸ் நிலையமொன்றில் இரவு வேளையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலைக்கு முற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இந்நபர் தனது சட்டைப் பைக்குள்ளிலிருந்த பிளேட்டை எடுத்து தனது கழுத்தில் 4-5 முறை தாறுமாறாகக் கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

சந்தேகநபரைக் கைது செய்து அவரது உடமையில் உள்ள பொருள்கள் தொடர்பில் சோதனை செய்து கைப்பற்றாமல் அவரை தடுப்பில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ளார்.