உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலை இழந்த மாணவியே அபார சாதனை படைத்துள்ளார்.
அவர் சாதாரண தர பரீட்சையில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இது தொடர்பில் எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி தெரிவிக்கையில் – இம்முறை சாதாரண தர பரீட்சையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.
அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.
மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.







