வடக்கில் புலனாய்வு பிரிவின் கண்ணில் மண்ணை தூவி முக்கிய புலி உறுப்பினர் தலைமறைவு?

விடுதலைப்புலிகளை மீளமைக்க முயன்றார் என்ற சந்தேகத்தில், கடந்த சில மாதங்களான அரச புலனாய்வுப் பிரிவுகளால் வலைவீசி தேடப்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என புலனாய்வுப்பிரிவு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த வருடம் டிசம்பர் 26ம் திகதி வவுனியா புதூர் பகுதியில் பொதியொன்றில் இருந்து ஆயுதங்கள், குண்டுகளை பொலிசார் மீட்டிருந்தனர்.

இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட 19 பேரை புலனாய்வுப்பிரிவினர் கைது செய்திருந்தனர்.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழு அதுவென பொலிசார் தெரிவித்திருந்தனர்.

எனினும், பிரதான சந்தேகநபரான ஆனந்தராசா என்பவர் புலனாய்வு பிரிவுனருக்கு டிமிக்கி விட்டபடி இருந்தார்.

தற்போது அவர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டார் என புலனாய்வு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.