யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளதால் வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை எதிர்வரும் ஏப்ரல் 30 க்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அப்புறப்படுத்தாவிட்டால் யாழ்.மாநகர சபை அப்புறப்படுத்தும் என எச்சரித்துள்ளதாக அங்காடி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர் மாற்றிடங்கள் வழங்கப்படுமென கூறிய முதல்வர் தற்போது மாற்று இடம்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தை நீங்களே பாருங்கள் என தெரிவித்ததையிட்டு தாம் கவலை அடைவதாக அங்காடி வியாபாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.






