கட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் !!

கட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் !!

கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.

அப்படி அணியக்கூடாது. அதன்மூலம் உங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உங்களை நோக்கி நீங்கள் ஈர்ப்பீர்கள். மோதிரவிரலுக்கு மோதிரங்கள் அணியலாம். இந்த நான்கு விரல்களைப் பொறுத்தவரையில் தவறில்லை.

ஆனால் இந்த கட்டைவிரலில் எந்த உலோகத்தையும் அணியவே கூடாது. அதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத சக்திகள், உங்களோடு தொடர்பு கொள்ள நேரும். குறிப்பாக, கட்டை விரலில் தங்கம், செம்பு போன்றவற்றை அணிவீர்களேயானால், மாந்திரீகப் பயிற்சி ஏவப்பட சில சக்திகளை நீங்கள் ஈர்ப்பீர்கள். வேறொருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இத்தகைய சக்திகளுக்கு அடிமையாவது உங்களுக்கு நல்லதில்லை.

கட்டைவிரலில் மோதிரம் அணிவதால் உங்களால் கையாள இயலாத, குறிப்பிட்ட விதமான சக்திகளை உங்களை நோக்கி நீங்கள் ஈர்க்கும்படி நேரும். உங்களை அது உலுக்கிப் போடலாம். நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும்.

அதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம். மோதிர விரலில் மட்டுமே மோதிரம் அணிய வேண்டும். மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டருக்கான மௌஸை போன்றது இவ்விரல். சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியும்.

இந்த உடலைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். உங்கள் உடலில் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை உடல்களின் மீதும் ஆளுமை செலுத்தலாம். உங்கள் மோதிர விரல் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும்.

மோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறது. இதனால் மோதிர விரலை செப்பனிடுவது மிக மிக அவசியமாகிறது. இதன்மூலம் உடலிற்கு ஒருவித ஸ்திரத்தை ஏற்படுத்த முடியும்.

கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More