எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மின் விநியோகத்தில் எதுவித தடையும் இருக்காது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அமைச்சு நுகர்வோரை கேட்டுள்ளது.
அதேவேளை, ஏப்ரல் மாதம் நடுப்பகுதி அளவில் மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வருதற்கு அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
மின்சாரத்தை பிறப்பிப்பதற்கு மேலதிக மின்பிறப்பாக்கிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அமைச்சின் பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்ன தெரிவித்தார்.
சிறுபோக விவசாய செயற்பாடுகளுக்கு நீர் தேக்கங்களிலிருந்து நீர், திறந்து விடப்படும் பொழுது, நீர் மின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.






