யாழில் பயங்கரம்! இளைஞனின் பெயரை கூறி அழைத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

கைதடி சந்தியில் உள்ள குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டிற்கு மேற்பட்டவர்கள் இளைஞனின் பெயரை கூறி கடைக்கு வெளிய அழைத்து இளைஞன் மீது தலைக்கவசத்தால் தாக்கிய பின்னர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலிற்கு இலக்கான யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதுடைய பூபாலாசிங்கம் ஜேசுதாஸ் என்பவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த குற்றச்செயல் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.