எதிர்பாராத நேரத்தில் பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்! மாத்தளையில் நடந்த சோகம்

திடீர் விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்வத்த, மாத்தளை வடக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.சி.பி இயந்திரம் ஒன்றின் மூலம் மண் நிரப்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தேங்காய் மரக்குற்றி ஒன்று மேல் பகுதியில் இருந்து உருண்டு வந்து குறித்த குழந்தையின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிஹில்வத்த, மாத்தளை வடக்கு பகுதியை சேர்ந்த 2 வயதும் 3 மாதங்களுமான நாகேந்தரன் லக்‌ஷான் எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஜே.சி.பி இயந்திரத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.