மது போதையில் அட்டகாசம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த தண்டனை!

இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன நீதிமன்றத்தினால் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நுகேகொடவிலுள்ள தேசிய வாகன போக்குவரத்து மத்திய நிலையத்தின் மருத்துவ பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு அவரை அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதிக்கு தனது செலவில் முச்சக்கர வண்டியொன்றை பெற்றுக்கொடுப்பதாக திமுத் கருணாரட்ன நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.