வீசா அனுமதிப் பத்திர சேவை தொடர்பில் ஒவ்வொரு பிரஜையும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்!!

வீசா அனுமதிப் பத்திர சேவை தொடர்பில் ஒவ்வொரு பிரஜையும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம்!!

இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்றால் என்ன?
இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்பது இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க வசதியளிக்கவும், அவர்கள் தங்கி இருக்கும் காலப் பகுதியை மட்டுப்படுத்தவும், அவ்வாறு தங்கி இருப்பதற்கான நிபந்தனைகளை அறிவிக்கவும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டிலோ அதனையொத்த ஆவணத்திலோ இருக்கின்ற புறக்குறிப்பாகும்.

இலங்கை வீசா அனுமதிப் பத்திர வகைகள் யாவை?
இலங்கைக்குள் பிரவேசிக்கவும் அத்துடன் / அல்லது அங்கு தங்கி இருக்கவும் அனுமதி வழங்கும் நான்கு வகையான வீசாக்கள் உள்ளன.

வருகைதரல் வீசா
வருகைதரல் வீசா என்பது வெளிநாட்டவரொருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த வீசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டுக்குள் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும் நிபந்தனைகளும் அடங்கி இருக்கும்.
சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம்
கண்கவர் இடங்களைப் பார்வையிடல், உல்லாசப் பயணங்கள், ஓய்வு நேரத்தைச் சுகமாகக் கழித்தல், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது யோகா பயிற்சி போன்றவற்றுக்காக குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற நல்லெண்ணம் பொருந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரம்
வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற இலங்கையரல்லாத ஆட்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். வதியும் வீசா அனுமதிப் பத்திர வகையில் எட்டு உப வகைகள் உள்ளன.

நான் எத்தகைய வதிவிட வீசா வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்திற்கு தகைமையுடயவன்?
1. தொழில்வாய்ப்பு வகையினம்
இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் அமுலாகி வருகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களில் சேவையாற்ற அவசியமான தொழில்வாண்மையாளர்களும்.
வங்கிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.
தொண்டர்கள்
அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆட்கள்
இலங்கைத் தூதரகங்களின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் அமைப்பாண்மைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்கள்.
தனியார் கம்பனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.
2. முதலீட்டு வகையினம்

இலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புகின்றவர்கள்.
இலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.
3. சமயம்சார் வகையினம்

துறவிகள் (மதகுருமார்கள்)
4. மாணவர் வகையினம்

பல்கலைக்கழக மாணவர்கள்
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்
பிற நிறுவனங்கள்
5. 1954 இந்திய – இலங்கை உடன்படிக்கையில் அடங்கும் பதிவு செய்த இந்தியர்கள்
6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்
7. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள்
வாழ்க்கைத்துணை
வெளிநாட்டு பிரசாவுரிமை கொண்ட சிறுவர்கள்
8. ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வீசா அனுமதிப் பத்திரங்கள்
“எனது கனவு இல்லம்” வீசா அனுமதிப்பத்திர நிகழ்ச்சித்திட்டம்
வதியும் விருந்தினர் வீசா அனுமதிப் பத்திர நிகழ்ச்சித்திட்டம்


இடைத்தங்கல் வீசா
இடைத்தங்கல் வீசா என்பது வெளிநாட்டவரொருவர் பிறிதொரு பயண முடிவிடத்தை நோக்கிச் செல்கின்ற வேளையில் தற்காலிகமாக தங்கிச் செல்லும் பொருட்டு இலங்கையில் பிரவேசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.
கைமாறு கருதாத வீசா (Gratis Visa)

ராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ புறக்குறிப்பினைக் கொண்ட கடவுச்சீட்டினைக் கொண்டுள்ள ஒருவருக்கு வீசா அனுமதி பெற எவ்விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வீசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவோர் யாவர்?
இலங்கை இரட்டைப் பிரசாவுரிமையை வைத்திருப்பவர்கள்.
பிரசாவுரிமைச் சட்டத்தின் 5 (2) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள பிறப்பினைக் கொண்ட சிறுவர்கள்.
இலங்கையில் பிறந்த 21 வயதிற்குக் குறைந்த இலங்கையரின் பிள்ளைகள்.
இலங்கை வீசா அனுமதிப் பத்திரத்திற்கான பொதுவான தகைமைகள் யாவை?
இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் கீழே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வீசா அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பர்.
நீங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கப் பொருத்தமானவரென இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் திருப்தியுறும் வேளையில்.
இலங்கைக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்கு இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வேளையில்.
நீங்கள் இலங்கைக்கு வருகைதரும் தினத்தில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றினை வைத்திருக்கும் வேளையில்.
இலங்கையில் நீங்கள் கழிக்கும் காலப் பகுதிக்குள் உங்களின் பராமரிப்புக்காகவும், உங்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை விநியோகித்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் போதுமானளவு நிதியம் உங்களிடம் இருப்பதாக குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் திருப்தியடையும் வேளையில்.
நீங்கள் ஒரு நாட்டுக்கான வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் உடையவரெனில் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கோ அல்லது நீங்கள் கருதியுள்ள அடுத்த பயண முடிவிட நாட்டுக்கான எழுத்திலான அனுமதி (டிக்கெற்) உங்களிடம் இருக்குமிடத்து.
வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரமொன்றின் பொதுவான நிபந்தனைகள் யாவை?

இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தைத் தவிர கொடுப்பனவுடனான அல்லது கொடுப்பனவற்ற எந்தவொரு தொழிலிலோ வியாபாரத்திலோ தொழில் முயற்சியிலோ ஈடுபடலாகாது.
வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு முன்னராக உங்களின் வீசா பயன்படுத்தப்படல் வேண்டும்.
உங்கள் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் மாத்திரம் இலங்கைக்கு வருகைதர உங்களின் வீசா அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும்.
வீசா அனுமதிப் பத்திர நீடிப்புக்கான கோரிக்கைகள் அனைத்தும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
கடமை நேரங்கள் யாவை?
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல்
சுற்றுலா வீசா விண்ணப்பப் பத்திரங்கள் வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை.
வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரங்கள் வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை.
வார இறுதி நாட்களிலும், அரசாங்க விடுமுறை நாட்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.