விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் 54 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் 54 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அது குறித்த விசாரணைகள் விரைவில் தொடங்கும்.
மேலும், சந்தேகநபர்கள் மூவர் தொடர்பில் ஆலோசனை வழங்க சட்டமாஅதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் ஆறு பேரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர், கூறியுள்ளார்.






