இனி தேடி அலைய அவசியம் இல்லை.. இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொழும்பு நகரில் அமைந்துள்ள சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரட்ன இதை தெரிவித்துள்ளார்.

எனினும் வெளிவிவகாரம் மற்றும் நிதி அமைச்சு மட்டும் மாற்றம் செய்யப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதோடு, பல அரச நிறுவனங்கள் பத்தரமுல்ல பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

மேலும் இதற்காக புதிய காரியாலயங்கள், கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களில் உள்ள தமது வேலைகளை நிவர்த்தி செய்துகொள்ள வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்கள் இடத்தை தேடித்திரிவது அனைவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிரமங்களை போக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.