இலங்கையில் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ள சட்டங்கள்!

மேல் மாகாண தனியார் போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் நிலவும் சட்டங்களை உறுதியாக முன்னெடுக்கப்போவதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதை பாவனை பரிசோதனைகளுக்கு திடீர் என உட்படுத்தப்படுவதோடு பயணிகளுக்கு டிக்கட் வழங்கப்படுவது தொடர்பிலும் சட்டத்தை கடுமையாக்கவுள்ளது.

அத்தோடு பயணிகள் பேருந்துகளுக்கு அனுமதிக்கப்பட்ட வர்ணங்களுக்கு மேலதிகமாக வர்ணங்கள், ஸ்டிக்கர்கள் பாவிக்கப்பட்டிருப்பின் அவற்றை அகற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.