தமிழ் , சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை தினம் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 5ம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 22ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.