இன்று காலை இலங்கையில் அரச பேரூந்து கோர விபத்து!! 8 பேரின் நிலை..

கொஸ்லந்த பூனாகலை பகுதயில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் கொஸ்லந்த மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 8 மணியளவில் பூனாகலையிலிருந்து கொஸ்லந்த நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று பெட்டிகல என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி 35 பள்ளத்தில் வீடோன்றை உடைத்துக்கொண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் குறித்த பஸ்ஸில் பயணித்த எட்டிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் – மீட்க்கப்பட்டு கொஸ்லந்த, தியதலாவ மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.