புதுவருடத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான தகவல்

இ.போ.சபையின் விசேட பேருந்து சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.போ.சபையின் நேர அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து சேவைகள் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் நன்மை கருதியே ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு, ஹட்டன், கண்டி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கி மேலதிகமாக 1,487 பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலும் விசேட பேருந்து சேவைகளை ஆரம்பிக்க இ.போ.சபை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.