பாதுகாப்பற்ற நீர் தேக்கத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

செவனகல பிரதேச வீடு ஒன்றில் பாதுகாப்பற்ற நீர் தேக்கம் ஒன்றில் வீழ்ந்து, குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை குழந்தை வீட்டின் முற்ற பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறிய குழந்தை 02 வயதும் 04 மாதங்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையில் தாயார் வீட்டினுள் இருந்துள்ள போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த பாதுகாப்பற்ற நீர் தேக்கத்தில் இதற்கு முன்னரும் குழந்தை ஒன்று வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.