தமிழர் தலைநகரில் புத்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்: 32 துண்டுகளாக வெட்டிய முஸ்லிம் நபர்

திருகோணமலை – புல்மோட்டை 32 துண்டுகளாக்கப்பட்ட புத்தர் சிலையை வைத்திருந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நபரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார்.

இதில் புல்மோட்டை,ஜின்னா புரம் ,4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய அப்துல் காதர் தாஹா முகம்மட் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடற்கரையோரத்தில் இருந்து நான்கு கிலோவுடைய புத்தர் சிலையினை வீட்டுக்குச் கொண்டு சென்று 32 துண்டுகளாக வெட்டி வைத்திருந்த நிலையில் திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.