2019ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறை இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர், மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலைத் தவணை, எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.






