மனைவியுடன் இலங்கை சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளிநாட்டுப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உனவட்டுன யத்தேஹிமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

53 வயதான சுவிடன் நாட்டுப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் கடந்த 29 ஆம் திகதி தனது கணவருடன் சுற்றுலா வந்து உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹொட்டலில் தங்கியுள்ளார்.

தனது மனைவி இறந்து விட்டதாக கணவன் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

பெண் தங்கியிருந்த அறையில் இரத்த கறையும் உடைந்த போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அறையில் மோதல் நடந்தமைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காலி நீதவான் இன்று மாலை ஹொட்டலுக்கு சென்று நீதவான் விசாரணைகளை நடத்தியுள்ளார்.